மயிலாடுதுறை மாவட்டத்தினை சேர்ந்தவர் ஹேமா.நடிப்பின் மேல் சிறுவயதில் இருந்த ஆர்வத்தினால் வாய்ப்பு தேட தொடங்கினார்.சென்னை வந்த அவர் தீவிரமாக வாய்ப்பு தேட தொடங்கினார்.அதில் அவருக்கு கிடைத்தது தான் பெப்பேர்ஸ் சேனலில் தொகுப்பாளினி வாய்ப்பு.அதை கைப்பற்றிக்கொண்டு அசத்தினார்.அதேபோல் வசந்த் டிவியிலும் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தார்.தொகுப்பாளினியாக இருந்தது போதும் வந்த வேலையே பாப்போம் என சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.ஏற்கனவே சின்னத்திரையில் இவர் உள்ளார் என்பதால் நாடகத்தில் எளிமையாக வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்திக்கொண்டு நாடகம் நடிக்க தொடங்கினார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மேலும் இவன் யார் என்று தெரிகிறதா,சவரகத்தி என பல தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.பல படங்கள் நிகழ்ச்சிகள் நாடகங்கள் என நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாண்டியன் ஸ்டார் நாடகத்தில் கிடைத்தது.இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் ஹேமா.இவர் இந்த நாடகத்தில் வில்லியாகவும் இல்லாமல் கதாநாயகியாகவும் இல்லாமல் அவ்வப்பொழுது கதாபாத்திரத்தினை மாற்றி மக்களை கவர்ந்து வருகிறார்.மேலும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார் ஹேமா.
இந்நிலையில் ஹேமாவுக்கு தற்போது ஆபரேஷன் நடைபெற்றுள்ளது.இவரின் கழுத்துக்கு கீழே உள்ள பகுதியில் 4 சென்டிமீட்டர் அளவு கட்டி ஒன்று இருந்துள்ளது.இந்த கட்டியை அப்படியே விட்டால் கேன்சர் கட்டி ஆகிவிடுமோ என பயந்து ஹேமா உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதனை நீக்கியுள்ளார்.மேலும் பெண்கள் அனைவரும் தங்களது உடல் பகுதிகளில் இருக்கும் கட்டிகள் குறித்து அலட்சியம் காட்டவேண்டும் உடனடியாக சோதித்து டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும்,இதுபோன்ற கட்டிகள் தான் நாளை கேன்சராக மாற கூடும் என கூறி வீடியோ பதிவிட்டு தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.இவரது ரசிகர்கள் இந்த வீடியோவில் விரைவில் குணமடைந்து திரும்ப வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்
Embed video credits : HEMA’S DIARY
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in