பட்டையை கிளப்பியதா இந்த பத்துதல – திரை விமர்சனம் (?/5)

முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை வலம் வருபவர் சிம்பு.இவருக்கு ரசிகர்கள் மனதில் எப்பொழுதும் ஒரு நீங்காத இடம் உண்டு என்பதே உண்மை. இவர் மீண்டும் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மீண்டும் சிம்பு நடிக்க தொடங்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.தற்போது இவர் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல படத்தில் நடித்துளளார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையாமைத்துள்ளார் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் கவுதம் மேனன்,கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் என பலரும் நடித்துள்ளனர்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே விமர்சனத்தில் காணலாம்.

பட்டையை கிளப்பியதா இந்த பத்துதல - திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

படத்தில் கன்னியாகுமரியை தனது கட்டுப்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக வைக்கிறார் ஏஜி இராவணன் எனப்படும் சிம்பு.இவரிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு இவரை கொ லை செய்ய முயல்கிறார் துணை முதல்வர் ஆக வரும் கவுதம் மேனன்.ஆனாலும் கவுதம் மேனனுக்கு மிஞ்சியது என்னமோ தோல்வி மட்டும் தான்.இந்நிலையில் ரகசிய போலீசாக வரும் கவுதம் கார்த்திக் ஏஜிஆர் கோட்டைக்குள் அவரது விசுவாசியாக நடித்து உள்ளே நுழைகிறார்.தனது அடியாளாக வரும் கவுதம் கார்த்திக் மீது அதிகம் அக்கறை கொள்கிறார் சிம்பு.ஏஜி இராவணன் பக்கம் வரை சென்ற கவுதம் அவருக்கு எதிராக ஆதாரத்தை எடுத்தாரா? சிம்புவை கொன்றார்களா?கவுதம் கார்த்திக் போலீஸ் என்று தெரிந்த பின்னர் சிம்பு என்ன செய்கிறார்,சிம்பு யார் என்ற அடுத்தடுத்த கேள்விகளுடன் படம் நகருகிறது.

விளம்பரம்

பட்டையை கிளப்பியதா இந்த பத்துதல - திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்..

விளம்பரம்

பத்துதல கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த மஃப்டி படத்தில் இருந்து உருவாகினாலும் இப்படம் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதைகளை கொண்டு இயக்குனர் கிருஷ்ணா இப்படத்திற்கு நியாயம் செய்துள்ளார்.ஏஜிஆர் ஆக வரும் சிம்பு சிவராஜ்குமார் விட அதிகளவு தனது நடிப்பினை காண்பித்து திரையரங்குகளை ஒவ்வொரு காட்சியிலும் அதிர வைத்துள்ளார்.இவரை தொடர்ந்து வரும் கவுதம் கார்த்திக் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.வில்லனாக வரும் கவுதம் மேனன் அடடா என்று ஆச்சரியமாக பார்க்கும் அளவுக்கு படத்தில் நடித்துள்ளார்.ப்ரியா பவானி சங்கர் நாயகியாக இருந்தாலும் அவரை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் காட்டியுள்ளது பாராட்டுக்குரியது.இவர்களுக்கு பின்னர் டிஜே, சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்கிலி, மது குருசாமி, சென்றாயன் தனது கதாபாத்திரத்தினை கட்சிதமாக நடித்து கொடுத்துள்ளனர்.ஏஆர் இசை படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளது குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் அசத்தியெடுத்துள்ளார்.சிம்புவின் வசனங்கள்,சண்டை காட்சிகள் படத்தில் எந்த சலிப்பையும் ஏற்படுத்தாமல் பார்வையாளர்களை திரையரங்குகளில் நகரவிடாமல் பார்க்க செய்துள்ளது பாராட்டுக்குரியது.படத்தில் நெகட்டிவ் என்று சொல்வதற்கு எங்கேயும் இடமில்லை

பத்துதல படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3.5/4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment