விஜய் டிவியில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் உடன் இரட்டை வால் குருவி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் பாவனி. பிறகு இவர் சின்னதம்பி என்ற சீரியலில் நடிகர் ப்ரஜின் உடன் இணைந்து நடித்து பல மக்களின் அன்பை பெற்றார். இவர் சினிமாவிலும் பணிபுரிய ஆசைப்பட்டு அதற்கு முயற்சி செய்யும் பொழுதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இவருக்கு வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சீரியலில் இவர் நடித்தபோதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
தெலுங்கை தாய் மொழியாக கொண்ட பாவனி தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மொழிகளில் அதிக சீரியல்களில் நடித்தவர். பிறகு வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 ல் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு கடுமையான போட்டியாளர் என்றே கூறலாம். இவருடன் நட்பு பாராட்டிய ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறினாலும் பலரின் ஆதரவோடு பிக்பாஸ் வீட்டில் வலம் வந்தார். இவரிடம் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் காதலிப்பது போன்ற விளையாட்டை நடத்தினார். Youtube Video Embed Code Credits: Galatta
ஆனால் பாவனி தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்ற பதிலுடன் முடித்து கொண்டனர். பிக்பாஸ் முடிந்து தற்போது வரை அவர்கள் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். தற்போது பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் உங்களுக்கும் அமீருக்கும் எப்போது கல்யாணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் நாங்கள் இருவரும் நண்பர்கள் எனக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று பதில் அளித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in