மனிதனின் நாகரிகம் தொடங்கிய காலத்தில் இருந்தே நம்முடன் பழகி வரும் ஒரு உயிரினம் என்றால் அது நாய் தான். மனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்கும் நாய் என வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. உழவுக்கு தேவைப்படும் மாடுகளை பழக்குவதற்கு முன்பே நாயை பழக்கியிருக்கிறான் மனிதன். அதனால்தான் என்னவோ இன்றளவும் நாய்க்கும் மனிதனுக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு வேளை உணவு அளித்தால் காலம் முழுவதும் நன்றியும், விசுவாசமும் தன் கண்களிலேயே காட்டும் உயிரினம் நாய் மட்டுமே. சில நாய்கள் பார்ப்பதற்கே மிக அழகாகவும், க்யூட்டாகவும் இருக்கும்.சில வகை நாய்கள் பார்ப்பதற்கே கொடூரமாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு வகை நாய்தான் பிட் புல் எனப்படும் நாய். இது பார்க்கவே கொடூரமாக இருக்கும். வீட்டில் வளர்க்ககூடிய வகையா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு தோற்றத்தை கொண்டிருக்கும். சில சமயங்களில் வளர்ப்பவர்களையே கடித்துக் குதறும் அளவிற்கு கொடூர குணம் கொண்டது. அந்த வகையில் தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கொலம்பியாவில் தான் வளர்த்த நாயே உரிமையாளரை கடித்து குதறி ரத்த வெள்ளத்தில் ஆக்கியுள்ளது. பல முறை போராடியும் நாயின் கடியிலிருந்து விடுபட முடியாமல் ரத்தம் சொட்ட அவர் லிஃப்டில் புரண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Youtube Video Code Embed Credits: Polimer News.
கொலம்பியாவில் 25 வயது பெண் ஒருவர் பிட்புல் வகை நாய் ஒன்றை வளர்ந்து வந்தார். நேற்று வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த அவரை அந்த நாய் திடீரென கடித்துக் குதற ஆரம்பித்தது. இதனால் நாயிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் லிஃப்டிற்குள் சென்று பதுங்கினார். ஆனால் விடாமல் லிஃப்டிற்குள் புகுந்த அந்த நாய் அவரை கடித்து குதறியது. லிஃப்ட் கதவு மூடியதால் அவரால் வெளியேற முடியவில்லை. பொத்தானை அழுத்தி அழுத்தி முயன்றும் தரைத்தளம் வரும் வரை அவரால் தப்பிக்க முடியவில்லை. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். பிட்புல் வகை நாய்கள் அதன் மூர்க்க குணத்திற்காக பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in