The Indian Times

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் எத்தனை இயக்குனர்கள் இருந்தாலும் இவர் படத்திற்கென்றே தனி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களை கவர்ந்த மாபெரும் இயக்குனர் மணிரத்னம். ஒரு காலத்தில் எந்த இயக்குனரை பிடிக்கும் என்று யாரை கேட்டாலும் மணிரத்னம் என்று தான் கூறுவார்கள். இவர் இறுதியாக சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் வைத்து செக்க செவந்த வானம் என்ற படத்தை இயக்கி இருந்தார். தமிழ் சினிமாவில் 2 அல்லது 3 ஹீரோக்களை சேர்த்து ஒரே படத்தில் இயக்குவதில் இவர் கைதேர்ந்தவர்.

Advertisement

அப்படி இவர் இயக்கிய மௌன ராகம் , தளபதி , செக்க செவந்த வானம் போன்ற பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி , கார்த்தி , விக்ரம் , ஐஸ்வர்யா ராய் , பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபலங்களை வைத்து பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி க்கும் மேல் என்று கூறப்படுகிறது. முதல் முறையாக தமிழ் சினிமா வரலாற்றில் மிக பெரிய பொருட்செலவில் உருவாகும் முதல் படம் பொன்னியின் செல்வன் தான். அதுவும் இந்த திரைப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பது, இந்த படத்தின் தரத்தையே உயர்த்தி காட்டுகிறது. இந்த படத்தில் எக்கச்சக்க முன்னணி நடிகர்கள் குவிந்துள்ளதால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ஜெயம் ரவி , கார்த்தி , பிரகாஷ் ராஜ் , திரிஷா ஆகியோர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிரது.

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in