நான் உன்னிடம் சண்டை போட்டுள்ளேன்… சினேகாவுடன் சண்டை போட்டது குறித்து பதிவிட்ட பிரசன்னா

நடிகை சினேகா மானசி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து.அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள்

நான் உன்னிடம் சண்டை போட்டுள்ளேன்... சினேகாவுடன் சண்டை போட்டது குறித்து பதிவிட்ட பிரசன்னா 1

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அனைவரையும் அசரவைக்கும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி கிகி புகைப்படங்கள்

நான் உன்னிடம் சண்டை போட்டுள்ளேன்... சினேகாவுடன் சண்டை போட்டது குறித்து பதிவிட்ட பிரசன்னா 2

விளம்பரம்

இவர் தற்போது தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.ரசிகர்கள் நண்பர்கள் என பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இவரது கணவர் நடிகர் பிரசன்னா மனைவியுடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை வீடியோவாக பதிவிட்டு மனைவிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார்.அதன்படி இவர் கூறியதாவது,நான் உன்னை எரிச்சலடைய வைத்துள்ளேன்,நீயும் என்ன எரிச்சலடைய வைத்துள்ளாய்,நானும் உன்னிடம் சண்டை போட்டுள்ளேன்,நீயும் என்னிடம் சண்டை போட்டுள்ளாய்,இதையெல்லாம் தாண்டி நான் உன்னை காதலிக்கிறேன்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment