தமிழக அரசியலில் மிகுந்த புகழ் பெற்றவர் தமிழிசை சௌந்தரராஜன். அடிப்படையில் மருத்துவரான இவர் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை குமரி அனந்தன் மற்றும் இவரது சித்தப்பா மறைந்த திரு வசந்த குமார் ஆகியோர் காங்கிரஸ் பேரியக்கத்தில் கோலோச்சியவர்கள், மது விலக்கை அமல் படுத்தக்கோரி குமரி அனந்தன் நடந்தே பல மைல் தூரம் சென்றவர். தமிழ் ஆர்வம் மற்றும் புலமை காரணமாக அவர் போற்றப்படுகிறார். வயது முதிர்வால் அவர் முன்பு போல எந்த வித அரசியல் செயல்களையும் ஈடுபடுவதில்லை. அவரது மகள் தமிழசை அப்பா மற்றும் சித்தப்பா ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எதிராக பாஜகவில் இணைத்து பணியாற்றினார். அவரது கடின கட்சியின் உழைப்பால் மாநில தலைவர் என்ற அந்தஸ்தை அடைந்தார். தாமரை மலரும் என்ற கோஷத்தை முன் வைத்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சினார். இவரது செயல்களால் தமிழகத்தில் பாஜக சிறிது சிறிதாக செல்வாக்கு பெற்றது.
தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் குறைந்த வாக்குகள் பெற்று அவர் தோல்வியே சந்தித்தார். இருப்பினும் அவரை பெருமை படுத்தும் விதமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு அவருக்கு தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் என்ற பெரிய பதவியை அளித்து அழகு பார்த்தது. அது மட்டும் இல்லாமல் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் என்ற பதவியையும் கொடுத்தது. தனக்கு வழங்கப்பட்ட இரண்டு பணிகளையும் செவ்வனே செய்து வருகிறார் தமிழிசை. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையில் திருப்திகரமாக செயல்பட்டு வருகிறார் என்ற தகவல்கள் வந்தன. ஒரு பேட்டியின் போது இதை அவரே கூறியுள்ளார். இதனால் வருகின்ற குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்தலில் தமிழிசை அவர்களை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. தமிழிசை அதை மறுத்து வருகிறார்.
தற்போதைய குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களின் வருகின்ற மே 2022 அன்றுடன் நிறைவடைய உள்ளது. எனவே நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் திருமதி. தமிழிசை அவர்களை பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சுக்கள் பலமாக எழத் தொடங்கியுள்ளன. தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் என்று இரண்டு மாநில ஆளுநராக சிறப்பாக பணியாற்றி வரும் தமிழிசை அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையும், தமிழக மக்களின் ஆதரவையும் பெற முடியும் என்று கணக்குகள் போட்டு வருகின்றன கட்சி தலைமை. அவ்வாறு திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குடியரசுத்தலைவர் ஆகும் பட்சத்தில் திரு. டாக்டர். ராதாகிருஷ்ணன் (1962-67), திரு. ஆர். வெங்கடராமன்(1987-92), திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்(2002-07) வரிசையில் ராஷ்டிரபதி பவனை அலங்கரிக்கப்போகும் நான்காவது தமிழர் என்பதும், பிரதீபா பாட்டீலுக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும். தமிழகத்திலிருந்து சென்று குடியரசு தலைவர் மாளிகையை அலங்கரிப்பாரா தமிழிசை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in