நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழக்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.
மெரினா படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை தனது வசம் தக்க வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.இவர் படங்கள் தற்போது கோடிகளில் வசூல் சாதனை படைத்தது சக நடிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.பல ஆண்டுகளாக நடித்து வரும் எவராலும் இத்தகைய வசூலை குறுகிய காலகட்டத்தில் பெற முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 10 வருடங்களில் அதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.காரணம் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதால்.தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சத்யராஜ்,பிரேம்ஜி என பலரும் நடித்துள்ளனர்.மாபெரும் நகைச்சுவை படமாக இப்படம் உருவாகியுள்ளது.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருந்தது,ஆனால் தற்போது படம் வெளியாவது தள்ளி சென்றுள்ளது.இதுகுறித்து அறிவிப்பினை வெளியிட நகைச்சுவை கலந்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது,அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சத்யராஜ் அவர் பின்னால் நிற்பது தெரியாமலேயே அவரை பற்றி நகைச்சுவையாக பேசியுள்ளார்.அதில் சத்யராஜ் சார் முன்ன மாதிரி இல்லை ரொம்ப மாறிவிட்டார்,வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் என்னை கட்டிப்பிடித்து பேசுவார் தற்போது அவரால் தான் படம் வெளியாவது தள்ளி சென்றுள்ளது,எதுகேட்டாலும் நான் கட்டப்பா என பாகுபலி படத்தில் நடித்து பான் இந்திய நடிகர் ஆகியதால் இவ்வாறு பண்ணுவதாகவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.மேலும் படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in