வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றியதால் இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது அதுவே இவரது இயற்பெயர் போல் ஆகிவிட்டது.சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இன்று கதாநாயகனாக மாறியுள்ளதற்கு முழு காரணம் அவரது கடின உழைப்பு மட்டுமே,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் தற்போது போனி கபூர் தயாரிப்பில் இவர் இயக்கி நடித்திருக்கும் படம் வீட்ல விசேஷம்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.தொடர்ந்து நடிகராகவும் இயக்குனர் ஆகவும் ஹாட்ரிக் வெற்றிகளை அடித்துள்ளார்.தற்போது இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.தற்போது இவர் மீண்டும் இயக்கிய வீட்ல விசேஷம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்கில் வெளியாகியது.இப்படத்தினை போனி கபூர் தயாரித்துள்ளார்.இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து மோசமாக வழக்கம் போல் விமர்சனம் செய்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் இப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிநடைபோடுவதாக திரையரங்க உரிமையாளர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.வீடியோ இறுதியில் ப்ளூ சட்டை மாறன் போல் அப்படியே அச்சு அசலாக பேசி படம் மக்களுக்கு பிடித்தால் போதும்,வேறு எந்த நீல சட்டைக்கும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in