கணவருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கணவருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார் 1

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.இவருக்கு இன்று பிறந்தநாள் ,இதனால் இவரது மகள் மற்றும் மகன்கள் தங்களது வாழ்த்துக்களை நடிகை ராதிகா சரத்குமார் அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்

கணவருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார் 2

விளம்பரம்

இந்நிலையில் நேற்று இரவு ராதிகா தனது கணவர் சரத்குமார் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் அவரது நட்பு வட்டாரங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.சினிமா மற்றும் அரசியல் என எத்தகைய வேலை இருந்தாலும் அதனை காதல் மனைவிக்காக ஓரம் கட்டிவிட்டு ராதிகாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியை சரத்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ராதிகாவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

விளம்பரம்

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment