பிரபல பழம் பெரும் நடிகர் எம் ஆர் ராதா மகளும்,நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகா ஆவார்.தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழில் பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை அடைந்தார். ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில் உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.இவருக்கு இன்று 60வது பிறந்தநாள் ,இதனால் இவரது மகள் மற்றும் மகன்கள் தங்களது வாழ்த்துக்களை நடிகை ராதிகா சரத்குமார் அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்
நேற்று இரவு பல திரை பிரபலங்களை அழைத்து தனது 60வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த பிறந்தநாள் நிகழ்வில் தனுஷ் சூர்யா ஜோதிகா என பல முன்னணி நட்சத்திங்களும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த புகைப்படங்களை சரத்குமார் மகள் வரலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு வைரலாகி வருகிறது.மேலும் பல ரசிகர்களும் ராதிகாவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in