ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.பல கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக முதல் முறையில் வெள்ளித்திரையில் தோன்றினார்.அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார்.பின்னர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியாகிய அற்புதம் படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பின்னர் தெலுங்கில் படங்களை இயக்கவும் தொடங்கினார்.தமிழில் இவர் இயக்கி நடித்த முனி படம் மாபெரும் வரவேற்பினை இவருக்கு பெற்று கொடுத்தது.இந்த படத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.இப்படத்தினை தொடர்ந்து காஞ்சனா,காஞ்சனா 2 ,காஞ்சனா 3 என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்தார் ராகவா லாரன்ஸ்.தற்போது அதிகாரம்,ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் தற்போது இவர் ருத்ரன் படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். வில்லனாக சரத்குமார் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் வருகிற 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.இதில் தொகுப்பாளராக விஜய் டிவி பாலா பங்கேற்றிருந்தார்.அவர் பல குழந்தைகள் படிப்புக்கு உதவுகிறார் என்பது அனைவர்க்கும் தெரியும்,அதுகுறித்து கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ் அவர் படிக்க வைக்கும் குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்காக முதல்கட்டமாக 10 லட்சம் ரூபாயை மேடையில் வழங்கியுள்ளார்.இதனால் பாலா அந்த இடத்திலேயே மனம் நெகிழ்ந்து லாரன்ஸ் காலில் விழுந்துள்ளார்.
Embed video credits : SUNTV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in