வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற தமிழ் விவசாயிகளின் யூடியூப் சேனலில் பல்வேறு வகையில் சமையல் நடைபெறுவது வழக்கம். இது பொதுவாக நான்கு விவசாய்கள் சேர்ந்து ஒரு காட்டு பகுதியில் சமைத்து அதை செய்யும் முறையை விளக்கமாக கூறுவர். இதில் பொதுவாக பல வகையான ருசியான சமையல் இருக்கும். இதை பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊரும் அளவிற்கு சமைத்து இருப்பர் அந்த விவசாயிகள். தமிழ் பண்பாட்டின் மனம் அந்த சமையலை பார்க்கும் போதே நம்மால் உணர முடியும்.
வி. சுப்பிரமணியம் வி. முருகேசன், வி. அய்யனார். G. தமிழ் செல்வன், T. முத்து மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து உருவாக்கிய இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் இந்த சமையல் நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்தது. ஆனால் இப்போது தமிழ் நாடு மட்டும் இல்லது இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு காரணம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான். இவர் தமிழகத்திற்கு வந்த போது இவர்கள் சமையல் செய்யும் இடத்தை கண்டுபிடித்து அவர் உதவியாளருடன் சேர்ந்து இன்ப அதிர்ச்சி செய்தார் அந்த விவசாயிகளை. மேலும் அவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு அதனுடன் சேர்த்து பல தமிழ் அர்த்தங்களை கற்றுக் கொண்டது பார்பவர்களை ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதையடுத்து அவர்களோட சேர்ந்து சமையல் செய்து அவர்களை பாராட்டி இருக்கிறார். இறுதியில் அவர்களோட சேர்ந்து உணவருந்தி தமிழ் பண்பாட்டு முறையாக கற்றுக் கொண்டேன் என்ற திருப்த்யில் விடை பெற்றார்.
Video Credits: Village Cooking Channel
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in