வைரலாகும் ராதே ஷியாம் திரைப்பட போஸ்டர்! | பிரபாஸ் பூஜா ஹெக்டே.

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழக மக்களால் மகேந்திர பாகுபலி என அழைக்கப்படுபவர் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர் பிரபாஸ். தெலுங்கில் பல ஹிட்டான திரைப்படங்களை கொடுத்து அதிக ரசிகர்களை வைத்திருக்கும் தெலுங்கு நடிகர்களுள் இவரும் ஒருவர். இவர் நடித்து வெளி வந்த பாகுபலி திரைப்படம் அளவில்லா பெரும் புகழை இவருக்கு பெற்று தந்தது. தெலுங்கில் மட்டுமல்லாமல் உலகளவில் பிக பெரிய சாதனை பெற்ற படம் பாகுபலி . பிரபாஸிற்கும் நடிகை அனுஷ்காவிற்கும் உலகளவில் பெயர் வாங்கி கொடுத்த படம் ராஜமௌலி இயக்கத்தில் வெளி வந்த பாகுபலி படம் தான்.

கட்டாயம் படிக்கவும்
முழு நேர Chef ஆகவே மாறிய நடிகை வாணி போஜன்! ரசித்து பார்க்கும் ரசிகர்கள்

வைரலாகும் ராதே ஷியாம் திரைப்பட போஸ்டர்! | பிரபாஸ் பூஜா ஹெக்டே. 1

விளம்பரம்

சமீபத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த சாஹோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும் வெற்றி படமாக அமையவில்லை. இதை தொடர்ந்து தற்போது பிரபாஸ் ராதே ஷியாம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீப நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பஸ்ட் லுக் வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. பிரமாண்டமாக உருவாக்கப்படும் இந்த காதல் கதை இத்தாலியில் உள்ள ரோம் நகரில் மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
புதுசா ட்ரை பண்ணிருக்காங்க :ஒரு Time பார்க்கலாம் BRO:காத்துவாக்குல ரெண்டு காதல் PUBLIC REVIEW!!

வைரலாகும் ராதே ஷியாம் திரைப்பட போஸ்டர்! | பிரபாஸ் பூஜா ஹெக்டே. 2

விளம்பரம்

இந்நிலையில், தற்போது மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலை எடுத்துரைக்கும் விதமாக இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் படத்தின் பிரமாண்டத்தை மிக அழகாக உயர்த்தி காட்டுகின்றது என்றே குறிப்பிடலாம். பனி சூழ்ந்த ரோம் நகரில் காதல் ஜோடியான பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் வெவேறு திசையை நோக்கி படுத்துக் கொண்டிருக்கும் காட்சி கண் குளிர வைத்துள்ளது. இந்த காட்சியை பார்க்கும்போதே நம்மை படத்திற்குள் கொண்டு செல்லும் உணர்வை நம்மால் உணரமுடியும். இந்த பிரமாண்ட காதல் கதையின் போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

கட்டாயம் படிக்கவும்
பார்வையாலேயே கொல்லுறாங்களே!!Photoshoot-ல் பட்டைய கிளப்பும் நடிகை Divya Bharathi

வைரலாகும் ராதே ஷியாம் திரைப்பட போஸ்டர்! | பிரபாஸ் பூஜா ஹெக்டே. 3

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment