மதுரையில் 250கிலோ எடையில் சிலை வைத்து ரஜினிக்கு கோவில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

மதுரையில் 250கிலோ எடையில் சிலை வைத்து ரஜினிக்கு கோவில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர் 1

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பலஇதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து இருக்கிறார் ரஜினிகாந்த் , அண்மையில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

மதுரையில் 250கிலோ எடையில் சிலை வைத்து ரஜினிக்கு கோவில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர் 2

விளம்பரம்

இந்நிலையில் ரசிகர் ஒருவர் மதுரையில் ரஜினிக்கு கோவில் கட்டி வழிபட்டு வரும் செய்தி வெளியாகி ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.250 கிலோ எடை உடைய கல்லில் ரஜினிக்கு சிலை வைத்து அவரை வழிபாடு செய்து வருகிறார்.இந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

மதுரையில் 250கிலோ எடையில் சிலை வைத்து ரஜினிக்கு கோவில் கட்டி வழிபடும் தீவிர ரசிகர் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment