சூப்பர் ஸ்டாரின் அரசியல் பேச்சுக்கள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். படங்கள் நடிப்பதை தாண்டி அரசியல் பற்றி அடிக்கடி பேசி தனது ரசிகர்களை லைம் லைட்டிலேயே வைத்திருப்பார் ரஜினி. தமிழகத்தின் இரு பெரும் ஜாம்பவன்களாக இருந்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் திரு.கருணாநிதி மற்றும் செல்வி. ஜெயலலிதா இருவரும் மறைந்த பின்பு அந்த இடம் வெற்றிடமாக இருப்பதாக கூறி தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது திருமண மண்டபமான ராகேவந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்.
ஆனால் இதெற்கெல்லாம் முன்பே 1996ம் ஆண்டு திமுக கூட்டணியை ஆதரித்து ரஜினி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் ஜெயலலிதா அவர்களை கடுமையாக எதிர்த்து பேசி வந்தார். ஜெ ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட இந்த கட்சியைக் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறி இருந்தார். இதனால் 1996 தேர்தலில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏன் ஜெயலலிதா கூட போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் படு தோல்வியை தழுவினார். அந்த கோபம் ரஜினி மீது ஜெயலலிதாவிற்கு இருந்து கொண்டே இருந்ததாக அப்போது தகவல்கள் வெளியானது.
தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவில் ஜெயலலிதா என்னைப் பார்த்து கருப்புப்பணம் வாங்கவில்லையா என்று கேட்கிறார். நான் கருப்பு பணம் வாங்கி இருக்கிறேன் ஓரளவுக்கு தான் வாங்கி இருக்கிறேன், பொய் சொல்ல விரும்பவில்லை என்று கூறுகிறார். சினிமா பற்றி தெரிந்தும் கருப்பு பணம் பற்றி கேட்கிறார் என்றால் இவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார் ஜெயலலிதா என்று கோபமாக கூறுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in