சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தினை விமர்சனம் செய்த ஆர் ஜே பாலாஜி: கடுப்பாகிய சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார்.இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும்

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தினை விமர்சனம் செய்த ஆர் ஜே பாலாஜி: கடுப்பாகிய சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் 1

விளம்பரம்

தற்போது இவர் ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார்,இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.ஜே பாலாஜி மேடையில் ரஜினி படங்களை விமர்சித்துள்ளது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.அதில் அவர் பேசியதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள மன்னன்,படையப்பா போன்ற படங்களில் பெண்களை தவறாக காமித்துள்ளதுதான்,பசங்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேற்றுமையை உருவாக்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தினை விமர்சனம் செய்த ஆர் ஜே பாலாஜி: கடுப்பாகிய சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் 2

விளம்பரம்

படையப்பா படத்துல வீட்டுல வேலை செய்யுற பொண்ண நல்லவங்களாகவும்,வெளிநாட்டில் படித்துவிட்டு வரும் பெண் கெட்டவங்களாகவும் காண்பித்துள்ளார்.அதேபோல் மன்னன் படத்தில் நன்கு படித்துவிட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தி கெட்டவங்க, காபி போட்டு கொடுக்கிற குஷ்பு நல்லவங்களா காட்டியிருப்பாங்கன்னு பேசியுள்ளார்.இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ஆர் ஜெ பாலாஜி மீது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பயங்கர கடுப்பில் உள்ளனர். மேலும் பெண்களை வில்லியாக காட்டுகிறார்கள் என்றால் அது கதாபாத்திரம்,ஏன் பிற படங்களில் பெண்களை தவறாக காட்டவில்லையா,சூப்பர் ஸ்டார் படத்தினை மட்டும் விமர்சிக்க காரணம் என்ன என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment