சச்சினின் வெறித்தனமான ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்தியா லெஜெண்ட்ஸ் !

விளம்பரம்

Road Safety World Series t20 தொடரில் இலங்கை லெஜெண்ட்ஸ்க்கு எதிரான இறுதி போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. 6 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இறுதி போட்டி வரை சென்றது இந்தியா மற்றும் இலங்கை அணி தான். நம்ம 90ஸ் கிட்ஸ்க்கு புடிச்ச சச்சின் , யுவராஜ் சிங் , யூசப் பதான் , இர்பான் பதான் , சேவாக் என ஒரு சில இந்திய வீரர்கள் இதில் கலந்துகொண்டு விளையாடினர்.

சச்சினின் வெறித்தனமான ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்தியா லெஜெண்ட்ஸ் ! 1

விளம்பரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு சச்சின் ,சேவாக் இந்த போட்டியில் விளையாடுவதால் அனைவரும் இந்த போட்டியை ரசித்து பார்த்தனர். நேற்று நடந்த இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா லெஜெண்ட்ஸ் அணி 181 ரன்களை எடுத்தது. யுவராஜ் சிங் 60 ரன்களும், யூசஃப் பதான் 62 ரன்களும் அடித்தனர், சச்சின் டெண்டுல்கர் 30 ரன்களும் அடித்து இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காலம் இறங்கிய இலங்கை லெஜெண்ட்ஸ் அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறிக்கொண்டு தான் இருந்தது. இறுதி ஒவேரில் 24 ரன்களை அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் 9 ரன்களை மட்டுமே இலங்கை அணி அடித்தது. இலங்கை லெஜெண்ட்ஸ் 167 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்ததால் இந்தியா லெஜெண்ட்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

விளம்பரம்

சச்சினின் வெறித்தனமான ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்தியா லெஜெண்ட்ஸ் ! 2

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top