மனைவியை விவாகரத்து செய்தாரா நடிகர் ஜெயம் ரவி… வைரலாகும் தகவல்கள்

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.

மனைவியை விவாகரத்து செய்தாரா நடிகர் ஜெயம் ரவி... வைரலாகும் தகவல்கள் 1

விளம்பரம்

மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.

மனைவியை விவாகரத்து செய்தாரா நடிகர் ஜெயம் ரவி... வைரலாகும் தகவல்கள் 2

விளம்பரம்

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஜெயம் ரவி, தனது மனைவியை விவாகரத்து செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் அவரின் மனைவியும் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படங்களை நீக்கி உள்ளார். இந்த செய்தி தற்போது தீ மாதிரி இணையத்தில் பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment