தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது. புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பல வெற்றிப்படங்களில் நடித்து பல தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளார்.இவரது படங்கள் நல்ல வசூலை பெறுவதால் இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் காத்துக்கொண்டிருந்தனர்.நடிப்பிற்காக நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார் விஜயகாந்த்,நடிகர் சங்க தலைவராக இருந்து தனது பணியினை சிறப்பாக செய்துவந்தார்.பின்னர் அங்கிருந்து அரசியலில் களம் இறங்கினார்.பல லட்சம் பேர் இவர் கட்சியில் உள்ளனர்.நிறைய நல்லதுகளை மட்டும் விஜயகாந்த் செய்து வந்துள்ளார்.அதனால் தான் மக்கள் இவரை கேப்டன் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
விஜயகாந்த் பல மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உதவிகளை செய்து வருகிறார்.தற்போது அவர் உடல்நலம் பாதிப்பு காரணமாக வீட்டிலேயே தான் உள்ளார்,வெளியே வருவது கிடையாது.இந்நிலையில் இன்று விஜயகாந்த் திருமண நாளை ஒட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in