தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதல்முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.இப்படி சிறு சிறு வேடங்களில் நடித்த சாய் பல்லவி தற்பொழுது தமிழ்,மலையாளம்,தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.
இந்நிலையில் தற்போது சாய் பல்லவி லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் நடிகை சாய் பல்லவி உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.இந்த புகைப்படம் இவர் அண்மையில் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது. இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.என்ன சாய் பல்லவி இப்படி ஆகிட்டிங்க என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் சிலர் இந்த உடல் அமைப்பு தான் உங்களுக்கு அழகாக உள்ளதாக கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.சாய் பல்லவி லேட்டஸ்ட் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in