விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதால் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் கதாநாயகியாக நடித்துவிட்டார் .தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படமான குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.
இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்து இவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. வெளிநாடுகளுக்கு சென்று இதற்கு மருத்துவம் மேற்கொண்டார்.இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்,தனது உடல்நலம் பெற வேண்டி பழனி கோவிலில் 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Embed video credits : News 7
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in