அவரை கணவர்னு சொல்லாதீங்க….சமந்தா பிரபல நிகழ்ச்சியில் அதிரடி

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதால் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

அவரை கணவர்னு சொல்லாதீங்க....சமந்தா பிரபல நிகழ்ச்சியில் அதிரடி 1

விளம்பரம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் கதாநாயகியாக நடித்துவிட்டார் .தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படமான குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.இவருக்கும் இவரது முன்னாள் கணவர் ஆன நாக சைதன்யாவிற்கு அக்டொபர் 2,2021ல் விவாகரத்து ஆகியது.

அவரை கணவர்னு சொல்லாதீங்க....சமந்தா பிரபல நிகழ்ச்சியில் அதிரடி 2

விளம்பரம்

அண்மையில் இவர் பிரபல டிவி நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா பற்றி இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார் ,உங்க கணவரை பற்றி கூறுங்கள் என கரண் கேட்க,கணவர் இல்லை முன்னாள் கணவர் என்று கூறுங்கள்,எங்கள் இருவரையும் ஒரே அறைக்குள் அனுப்பினால் அங்கு கூர்மையான பொருட்களை வைக்காதீர்கள் என மிகுந்த வெறுப்புடன் பேசியுள்ளார்.மேலும் அவரது முன்னாள் கணவரை பற்றி இந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசியுள்ளார் என தகவலும் வெளியாகியுள்ளது

விளம்பரம்

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment