நான் வீழ்வேன் என நினைத்தாயோ.. மீண்டும் வந்த சமந்தா .. வெறித்தனமான WORKOUT-ல் களம் இறங்கிய சமந்தா

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நான் வீழ்வேன் என நினைத்தாயோ.. மீண்டும் வந்த சமந்தா .. வெறித்தனமான WORKOUT-ல் களம் இறங்கிய சமந்தா 1

விளம்பரம்

அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து சமந்தாவின் புகழ் மேலும் ஓங்கியது.தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் இவர் இயக்குனர் முகுந்தன் இயக்கத்தில் நடித்திருந்த யசோதா படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.

நான் வீழ்வேன் என நினைத்தாயோ.. மீண்டும் வந்த சமந்தா .. வெறித்தனமான WORKOUT-ல் களம் இறங்கிய சமந்தா 2

விளம்பரம்

இவர் விரைவில் குணமடைய இவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.தற்போது இவர் சில மாதங்கள் ஓய்வெடுக்க போவதாக தகவல் வெளியாகி இருந்தது.மேலும் அடிக்கடி சமந்தா உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் பழைய சமந்தாவாக வருகை தந்து அனைவரையும் மிரட்டி எடுத்து அசர வைத்துள்ளார்.தற்போது இவர் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இப்படி உங்களை மீண்டும் பார்க்க தான் காத்திருந்தோம் என ரசிகர்களாக நெகிழ்ச்சியடைந்து கருத்துக்களை வீடியோவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment