நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. தாறுமாறாக உடற்பயிற்சி செய்யும் நடிகை சமந்தா.. ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.... தாறுமாறாக உடற்பயிற்சி செய்யும் நடிகை சமந்தா.. ரசிகர்கள் மகிழ்ச்சி 1

விளம்பரம்

அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து சமந்தாவின் புகழ் மேலும் ஓங்கியது.தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் இவர் இயக்குனர் முகுந்தன் இயக்கத்தில் நடித்திருந்த யசோதா படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.... தாறுமாறாக உடற்பயிற்சி செய்யும் நடிகை சமந்தா.. ரசிகர்கள் மகிழ்ச்சி 2

விளம்பரம்

இவர் விரைவில் குணமடைய இவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.தற்போது இவர் சில மாதங்கள் ஓய்வெடுக்க போவதாக தகவல் வெளியாகி இருந்தது.மேலும் அடிக்கடி சமந்தா உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் பழைய சமந்தாவாக வருகை தந்து அனைவரையும் மிரட்டி எடுத்து அசர வைத்துள்ளார்.தற்போது இவர் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த சமந்தா ரசிகர்கள் சமந்தா மீண்டும் நலமாகிவிட்டார் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment