The Indian Times

திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ், ஆல்யா மானசா ! அந்த கதைய நீங்களே கேளுங்க

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருமே ரசிகர்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தனர். சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் ஆல்யா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இவர்களது திருமணத்தில் ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை. பல எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் சூட்டினர். இவரை போல் ஒரு கணவர் அமைந்திட மாட்டாரா என்று பல பெண்கள் ஏங்குகிற அளவுக்கு சஞ்சீவ் தன் காதலை வெளிப்படுத்துகிறார் என்றே கூறலாம்.

இதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பாசிட்டிவாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா அவ்வப்போது தங்களது குழந்தையின் வீடியோவை பதிவு செய்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் சில குறும்பு தனமான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் தங்களுக்காக ஒரு youtube channel வைத்துள்ளனர். அதில் தற்போது நம்ம வீடு கல்யாணம் என்ற வீடியோவில் தங்களுக்கு எப்படி திருமணம் நடந்தாது என்பதை குறித்து பேசியுள்ளனர். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Video Embed Credits SANJIEV&ALYA youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in