மக்கள் மனதில் இடம்பிடித்தாரா சர்தார் – திரைவிமர்சனம்(?/5)

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்து தனக்கான இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.தொடர்ந்து நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வரும் கார்த்தி முதல் முறையாக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்.மேலும் இவர்களுடன் சிறுவன் ரித்விக் நடித்துள்ளார்.லைலா பல வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

மக்கள் மனதில் இடம்பிடித்தாரா சர்தார் - திரைவிமர்சனம்(?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

சென்னையில் போலிஸ் அதிகாரி விஜயகுமார் கதாபாத்திரத்தில் கார்த்தி அறிமுகமாகிறார்.இவர் எந்த புகாரை கையிலெடுத்தாலும் அதன் மூலம் ட்ரெண்ட் ஆகி பப்ளிசிட்டி தேடுபவர்.இவர் தனது சிறுவயது தோழியான ராஷி கண்ணாவை காதலிக்கிறார்.இப்படி ஒரு பக்கம் கதை நகர மற்றொரு பக்கம் நடிகை லைலா குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களின் மூலம் ஏற்படும் அபாயங்களுக்கு எதிராக போராடி வருகிறார்.அதே சமயம் இந்திய அரசாங்கத்தின் முக்கிய ஆவணம் திருடு போகவே,அதனை கண்டுபிடிக்க வருகிறார் கார்த்தி,அதனை திருடியது லைலா என்பதை தெரிந்துகொண்டு பின்தொடருகிறார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சுஜிதா அண்ணியின் அழகிய புகைப்படங்கள்

மக்கள் மனதில் இடம்பிடித்தாரா சர்தார் - திரைவிமர்சனம்(?/5) 2

ஆனால் லைலா தற்கொலை செய்கிறார்,பின்னர் இது கொலை என கண்டறியும் கார்த்தி ,அவரை கொலை செய்தது யார் ,எதற்காக என்பதை கண்டறிய முயல்கிறார் அப்பொழுது வாட்டர் மாபியா குறித்து தெரியவரவே அதற்காக போராடிய லைலா பற்றியும் தெரிந்துகொள்கிறார் மேலும் லைலா ஜெயிலில் உள்ள உளவாளி சர்தாரை வெளிய கொண்டு வர முயற்சிப்பது கார்த்திக்கு தெரிய வருகிறது.பின்னர் சர்தார் யார் ,எதற்காக இந்தியா வந்தார்,சிறையில் அவர் இருக்க காரணம் என்ன ? வாட்டர் மாஃபியாவை எப்படி தடுத்து நிறுத்துகிறார் கார்த்தி என்பதே மீதி படத்தின் கதை ஆகும்

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  உடல் எடை மெலிந்து ஆளே மாறிய நடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மக்கள் மனதில் இடம்பிடித்தாரா சர்தார் - திரைவிமர்சனம்(?/5) 3

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

நடிகர் கார்த்திக்கு நடிப்பை சொல்லியா கொடுக்க வேண்டும்,அப்பா மகன் என இரட்டை வேடங்களில் பிரித்து மேய்ந்துள்ளார். அவரின் நடிப்பு படத்திற்கு படம் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கிறது.முதல் முறையாக ஒரே படத்தில் பல வேடங்களை முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.இவரின் வேடங்கள் ரசிகர்களை சலிக்க வைக்காமல் ரசிக்க வைத்துள்ளது.ராசிக்கண்ணா ,ரஜிஸா விஜயன் ,ரித்விக் தங்களது நடிப்பினை சிறப்பாக செய்துள்ளனர்.லைலா இன்னும் கொஞ்ச நேரம் படத்தில் வந்திருந்தால் இன்னும் படம் நல்லா இருந்திருக்கலாம் என தோன்ற வைத்துள்ளது.பாடல்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை ,படத்தில் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வைக்கப்பட்டுள்ளதை போன்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.ஜிவி பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தினை சேர்த்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ப்ரேமம் பட நடிகை மடோனா செபாஸ்டினின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்

மக்கள் மனதில் இடம்பிடித்தாரா சர்தார் - திரைவிமர்சனம்(?/5) 4

பிளாஸ்டிக் குடிநீர் குறித்து இயக்குனர் மித்ரன் அதிகம் படித்து ஆராய்ந்துள்ளது படத்தினை பார்க்கும்பொழுது தெரிகிறது.இது நிச்சயம் பெரும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் என்பது உறுதி.எந்த இழுவையும் இல்லாமல் திரைக்கதை நகர்வது மிக அம்சமாக அமைந்துள்ளது.கதைக்குள் ரசிகர்கள் செல்வதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகுவது மைனஸ் ஆக அமைந்துள்ளது.படத்தில் குறை என்று கூறுவதற்கு பெரிதாக இல்லை ஆனால் பாடல்கள் தேவையில்லாத இடத்தில் இருப்பதை எடுத்திருந்தால் கூடுதல் பலமாக அமைந்திருக்கும்

சர்தார் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment