சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யா தர்ஷினி.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் தற்போது சுந்தர் சி இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர்
இவரது உடன் பிறந்த சகோதரி பிரியதர்ஷினி.இவரும் தங்கை போலவே பிரபலமான தொகுப்பாளினி ஆவார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அலாதி பிரியம்.இதனால் இவர் மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கி இருக்கிறார்.இவரை தற்போது கடல் அலை தாக்கியுள்ளது.இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடல் அலையில் அமர்ந்து நடனம் ஆடி கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்த கடல் அலை அவரை கீழே தள்ளியது.அதிர்ஷ்டவசமாக இதில் இவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பதறி உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என தெரிவித்துள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in