செம்பி முதல்நாள் கலெக்சனிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய ராங்கி மற்றும் டிரைவர் ஜமுனா

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே போதும் எடுத்த படங்களை இறக்கி விடுவார்கள்.அந்த வரிசையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் செம்பி,ராங்கி,டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் வெளியாகியது.இந்த படங்கள் அனைத்தும் பெண் கதாபாத்திரத்தினை மையமாக வைத்து எடுத்துள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வெளியான படங்களில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள படம் என்று பார்த்தால் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் செம்பி படம் தான்.

கட்டாயம் படிக்கவும்  கோவாவில் விடுமுறையை கொண்டாடிய விஜய் டிவி சின்னமருமகள் சீரியல் நாயகி புகைப்படங்கள்

செம்பி முதல்நாள் கலெக்சனிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய ராங்கி மற்றும் டிரைவர் ஜமுனா 1

விளம்பரம்

ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.இதனால் செம்பி திரைப்படத்திற்கு கூட்டம் கூடியுள்ளது.இந்நிலையில் செம்பி படம் முதல் நாளே தமிழ்நாட்டில் 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதே சமயம் இப்படத்துடன் வெளியாகிய த்ரிஷாவின் ராங்கி படம் முதல் நாளில் 36 லட்சம் வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகிய டிரைவர் ஜமுனா முதல் நாளில் 21 லட்சம் வரை வசூலித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகு கொஞ்சும் நடிகை மடோனா செபாஸ்டினின் அழகிய புகைப்படங்கள்

செம்பி முதல்நாள் கலெக்சனிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய ராங்கி மற்றும் டிரைவர் ஜமுனா 2

விளம்பரம்

இந்நிலையில் வசூலில் முன்னோடியாக இருக்கும் படம் என்று பார்த்தால் அது கோவை சரளாவின் செம்பி படம் தான்.இந்நிலையில் வரும் நாட்களில் விடுமுறை என்பதால் மேலும் இப்படங்களின் வசூல்கள் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இப்படங்களின் அதிகாரபூர்வ வசூல் விபரங்களை படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment