சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமாகிய நடிகை பிரியங்கா நல்காரி.தெலுங்கு நடிகையான இவர் முதன் முதலில் அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பல தெலுங்கு படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் ரோஜா தொடரில் தமிழில் நாயகியாக களம் இறங்கி அனைவரையும் கவர்ந்தார்.இவர் தெலுங்கில் பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.தெலுங்கு சினிமாவில் சரியான வரவேற்பு இவருக்கு கிடைக்காததால் தற்போது தமிழ் பக்கம் களம் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார்.
ரோஜா சீரியல் பெரும் வரவேற்பினை குடும்ப பெண்களிடம் பெற்றது.இந்த சீரியல் மூலம் பல மக்களை சென்றடைந்தார் பிரியங்கா.2018ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் தொடங்கிய இந்த சீரியல் 5 ஆண்டுகளாக இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது.இதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவும் அளித்து வருகின்றனர்.தமிழை போலவே தெலுங்கிலும் சின்னத்திரையில் நாடகங்களை நடித்துள்ளார்.ஆனால் இவருக்கு எதிலும் கிடைக்காத வரவேற்பு இந்த ரோஜா தொடரில் கிடைத்துள்ளது.இதனால் மகிழ்ச்சியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது இவர் தனக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.இவர் தான் காதலித்து வந்தவரை இன்று கோவிலில் வைத்து எளிய முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
Will Chaithra Reddy (kayal) divorce her husband and marry Sanjeev (ezhil) in Kayal TV serial with whom she is acting in very intimate love scenes?