தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து சினிமாவை கலக்கியவர்.1997 ஆம் ஆண்டு இயக்குனர் சபாபதி இயக்கத்தில் வெளியாகிய வி ஐ பி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்து அசத்தினார்.அஜித்க்குமாருக்கு இவர் ஜோடியாக நடித்த வாலி திரைப்படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.இதன்மூலம் தொடர்ந்து தமிழ் படங்களை நடித்து முன்னணி நடிகையாக உருவாகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது வயது காரணத்தினால் கதாநாயகியாக சினிமாவில் நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் மொழி சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மட்டும் ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வரும் சிம்ரன் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அண்மையில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக மஹான் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.
இவரது தங்கை மோனல் , இவரும் சிம்ரனை போல சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர்.ஆனால் சில காரணங்களால் த ற் கொ லை செய்துகொண்டார்.இந்நிலையில் இத்தனை வருடங்களுக்கு பிறகும் தனது தங்கையை மறக்காமல் அவருடன் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு உனது அன்பு என்று நினைவில் இருக்கிறது,உன்னை ஒரு போதும் மறக்கமாட்டோம் என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in