ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட பாடகர் அறிவு.. ஆறு மாதம் தூக்கமே இல்லை கவலையுடன் நொந்து பதிவிட்ட அறிவு

கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர் அறிவு மற்றும் பாடகி தீ ENJOY ENJAAMI பாடலை வெளியிட்டு இருந்தனர்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இந்நிலையில் ரோலிங் ஸ்டோனின் என்ற இதழ் ஒன்று இப்பாடலை பெருமை படுத்தும் விதமாக தனது இதழில் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய தீ புகைப்படத்தினை மட்டும் பதிவிட்டு இருந்தது.பாடகர் அறிவு புகைப்படத்தினை அட்டைப்படத்தில் குறிப்பிடவில்லை.இந்த சர்ச்சை பெருமளவு வெடித்தது.இதனை தொடர்ந்து ரோலிங் ஸ்டோனின் இதழ் மீண்டும் அறிவுப்படத்துடன் கூடிய அட்டைப்படம் வெளியிட்டது.

ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட பாடகர் அறிவு.. ஆறு மாதம் தூக்கமே இல்லை கவலையுடன் நொந்து பதிவிட்ட அறிவு 1

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் சில தினங்களுக்கு முன்பு ஒலிம்பியாட் போட்டி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பாடகி தீ மட்டும் கலந்துகொண்டு பாடல் பாடினார்,அறிவு இல்லாததால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியை அடைந்தனர்.இதுவரை இதுபற்றி எதுவும் குறிப்பிடாத அறிவு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த பதிவில் அவர் கூறியதாவது,நான் இசையமைத்தேன்,எழுதினேன்,பாடினேன் நடித்தேன் .எனக்கு யாரும் ஒரு வார்த்தைகளை கூட தரவில்லை ,இப்பொது இருக்கும் சூழ்நிலையில் நான் ஆறு மாதங்களாக தூக்கமில்லாமல்,மனம் அழுத்தம் நிறைந்த இரவுகளை கடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட பாடகர் அறிவு.. ஆறு மாதம் தூக்கமே இல்லை கவலையுடன் நொந்து பதிவிட்ட அறிவு 2

விளம்பரம்

என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறையின் ஒடுக்குமுறை அடையாளமாக இருக்கும்.நாட்டுப்புற பாடல்கள் சுமார் 10ஆயிரம் பாடல்கள் உள்ளன.இது முன்னோர்களின் மூச்சு,அவர்களின் வலி ,அவர்களின் எதிர்ப்பு போன்றவைகளை வெளிப்படுத்தும் விதமாக பாடல்கள் அமைந்துள்ளன.நீங்கள் உறங்கும் பொழுது உங்களது பொக்கிஷத்தினை எடுத்துக்கொள்ளலாம்,ஆனால் நீங்கள் விழித்திருக்கும்போது அது நடக்காது இறுதியில் உண்மையே வெல்லும் என கூறி பதிவிட்டுள்ளார்.

ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட பாடகர் அறிவு.. ஆறு மாதம் தூக்கமே இல்லை கவலையுடன் நொந்து பதிவிட்ட அறிவு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட பாடகர் அறிவு.. ஆறு மாதம் தூக்கமே இல்லை கவலையுடன் நொந்து பதிவிட்ட அறிவு”

Leave a Comment