தமிழ் சினிமாவில் முன்னனி பாடகராக வலம் வருபவர் சிங்கர் க்ரிஷ்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த இவர் அரபு நாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.பின்னர் சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என சென்னை வந்தார்.சென்னையில் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார். அப்பொழுதுதான் composer கணேஷ்குமார் அறிமுகம் கிடைக்கவே அவரது ஆல்பம் பாடலுக்கு முதல் முறையாக பாடல் பாடினார் க்ரிஷ்.இன்று தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி ரசிகர்களை தனது குரலினால் கட்டிபோட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவர் குறித்த தகவல்களை கணேஷ்குமார் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ்க்கு அனுப்பவே,க்ரிஷ் குரல் பிடித்த ஹரிஷ் அவருக்கு வாய்ப்பளித்தார்.அதன்படி முதல் முறையாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் இடம்பெற்ற மஞ்சள் வெயில் எனும் பாடலை பாடி திரைத்துறையில் பாடகராக அறிமுகம் ஆகினார்.இதன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.பல பாடல்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை வைத்துள்ளார் க்ரிஷ்.இவர் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
க்ரிஷ் தனது மகளுடன் இணைந்து அடிக்கடி நகைச்சுவை வீடியோ செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்,இவரது மகள் கூடைப்பந்து போட்டியில் கோல்டு மெடல் வாங்கியுள்ளார்,அதனை தந்தையிடம் காண்பித்து அவரை சொல்லி அந்த மெடலை தனது கழுத்தில் போட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் சிங்கர் க்ரிஷ் மகளை பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பயங்கர ட்ரெண்ட் ஆகி வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in