ஜீ தமிழ் சேனல் பிரபல பாடகி ரமணியம்மாள் மறைவு – ரசிகர்கள் வருத்தம்

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய சரிகமப என்ற நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உண்டு.காரணம் புதியவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவதனால்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் பாடகராக சினிமாவில் கலக்கி வருகின்றனர்,அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பாடகியாக கலந்துகொண்டு தனது குரலினால் அனைவரையும் மயக்கியவர்தான் ரமணியம்மாள்.இவர் பாடுவதை கேட்டால் இவரின் குரலுக்கு தனி திறமை உள்ளதை உணர முடியும்.அந்தளவிற்கு நாட்டுப்புற பாடல்களில் பட்டையை கிளப்புபவர் இவர்.

ஜீ தமிழ் சேனல் பிரபல பாடகி ரமணியம்மாள் மறைவு - ரசிகர்கள் வருத்தம் 1

விளம்பரம்

இந்த ஜீ தமிழ் மேடை இவரது திறமைக்கும் வாய்ப்பு கொடுத்தது.இந்த வயதிலும் மனம் தளராமல் தனது திறமையை காட்டவேண்டும் என பாடல்களை பாடி அசத்திவந்தார்.இவர் முன்னதாக காத்தவராயன்,ஹரிதாஸ்,சண்டக்கோழி 2,ஜூங்கா போன்ற படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்.தனது நாட்டுப்புற இசையினால் அனைவரையும் கட்டிப்போட்டவர் ரமணியம்மாள்.இவர் வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தியுள்ளார்.இந்த செய்தி இவரின் ரசிகர்களுக்கும் சரிகமப நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.ரமணியம்மாளின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பாடகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment