The Indian Times

ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி Selfie எடுத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் அளவிற்கு உச்சத்தை அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். பல இன்னல்களை கடந்து , கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தொலைக்காட்சி தொகுப்பாளரும் சினிமா நடிகராகலாம், அதுவும் சாதாரண நடிகராக இல்லாமல் மாஸ் ஹீரோவாக உச்சத்தையே அடையலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன் ஓரு சிறந்த உதாரணம்.

இவரை பாராட்டும் விதமாக தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது ஒரு சாமானியனை சாதனையாளராக மாற்றியுள்ளது. தற்போது இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இவர் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவத்தி இயக்கி வருகிறார்.

Advertisement

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விடேய் ஹீரோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் selifie கேட்ட தன்னுடைய ரசிகர்களிடம் பேசி கூட்டமாக selfie எடுத்துக்கொண்டார் சிவகார்த்திகேயன். Watch the video below 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in