உயிரே உன்னை வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன்… நடிகை சினேகா பிரசன்னா திருமண புகைப்படம் இணையத்தில் வைரல்

நடிகை சினேகா மானசி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து.அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார்.

உயிரே உன்னை வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன்... நடிகை சினேகா பிரசன்னா திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் 1

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

உயிரே உன்னை வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன்... நடிகை சினேகா பிரசன்னா திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் 2

விளம்பரம்

இவர்கள் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இவர்களது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்க பட்டு வருகிறது.அந்த வரிசையில் தற்போது இருவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அட அட ரெண்டு பேரும் எவ்வளவு கியூட்டா இருக்காங்க,இதே காதலுடன் தான் இப்போ வரைக்கும் இருவரும் இருக்குறாங்க என கூறி இருவரையும் வாழ்த்தி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் சினேகா பிரசன்னா ரசிகர்கள்

உயிரே உன்னை வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன்... நடிகை சினேகா பிரசன்னா திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment