The Indian Times

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சூர்யாவின் சூரரை போற்று! ஏமாற்றமடைந்த ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கதாநாயகன் என்றாலே அதில் சூர்யாவும் ஒருவர். தன் முதல் படத்தில் பல விமர்சனங்களுக்குள்ளானாலும் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் சூர்யா. இவர் ஒரு சிறந்த நடிகர் என்று தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கே எடுத்துக்காட்டியது இவர் கடையாக நடித்த திரைப்படம் சூரரை போற்று. சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதிலிருந்து மீண்டெழுந்த சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த படத்தில் வில்லனாக நடிகர் வினை நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. அது மட்டுமில்லாமல் , இவர் நடித்த சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி சூர்யா ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்தது. 92வது ஆஸ்கர் போட்டிக்கான இறுதி பரிந்துரை பட்டியல் தற்போது இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நாயகன், சிறந்த நாயகி உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கான ஆஸ்கர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement
Suriya Soorarai Pottru Movie Stills HD

ஓ.டி.டி படங்களும் இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம் என்ற தகவல் வெளியானதும் சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 366 படங்கள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியாவில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்றும் கலந்து கொண்டு தொடர்ந்து 7 நாட்கள் திரையிடப்பட்டு ஜுரிக்களால் தேர்வு செய்ய பட்டது பெருமையாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள நாமினேஷன் பட்டியலில் இருந்து சூரரை போற்று வெளியேற்றப்பட்டு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது சூர்யா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in