லாக்கப் படத்தின் இயக்குனர் ஆன சார்லஸின் அடுத்த படம் தான் சொப்பன சுந்தரி.இப்படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்..இப்படத்தில் இவருடன் தீபா சங்கர்,லட்சுமி பிரியா,கருணாகரன்,சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அஜ்மல் என்பவர் இசையமைத்துள்ளார்.இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் முழுமையான விமர்சனத்தினை கீழே காணலாம்.
படத்தின் கதை:
படத்தில் கதையின் நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் வாங்கிய நகைக்கு கார் ஒன்றை பரிசாக பெறுகிறார் ஐஸ்வர்யா.இந்த காரை ஒரு நாள் இரவு வாய்பேச முடியாத அக்கா மற்றும் அவரது வருங்கால கணவர் எடுத்து செல்லும் வழியில் ஒருவரை காரை வைத்து ஏத்தி விடுகின்றனர்,அந்த உடலையும் காரில் எடுத்துக்கொண்டு வருகின்றனர்,இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் காரை பறித்தே ஆகவேண்டும் என அவரது அண்ணன் ஒரு பக்கம் திரிகிறார்.இறுதியில் கார் யாருக்கு கிடைத்தது,காரில் இருந்த பிணம் என்ன ஆனது அதனை எப்படி சமாளித்தார் ஐஸ்வர்யா என்பதே மீதி படத்தின் கதை ஆகும்.
படத்தின் விமர்சனம் :
த்ரில்லர் படத்தையும் நகைச்சுவையாக எடுக்கலாம் என்பதை நிரூபித்துவிட்டார் இயக்குனர்.ஐஸ்வர்யாவின் நடிப்பு பிரம்மிக்க வைக்கின்றது.படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.காமெடி மற்றும் த்ரில்லரை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் திரைக்கதை என்பது சரியாக அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என தோன்றவைக்கின்றன.இருப்பினும் இந்த கதையும் வித்தியாசமாக நகைச்சுவயாகவும் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.படத்தின் பாடல்களில் இசையமைப்பாளர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என தோன்றுகிறது.மொத்தத்தில் படம் ஏமாற்றவில்லை
சொப்பன சுந்தரி படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in