தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் T.ராஜேந்தர்.இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகர்,இசையமைப்பாளர் என பல அவதாரங்களை தமிழ் சினிமாவில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்த இவருக்கு இப்படம் மக்களிடம் பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றியை தன்வசம் வைக்க தொடங்கினார். அந்த காலத்திலேயே பெண்களை தொடாமல் நடிப்பவர் என்ற நற்பெயரும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் அரசியலில் இறங்கி அதன் ஆழத்தினையும் பார்த்தவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்,ஒரு பெண் குழந்தை உள்ளது.இதில் மகன் சிலம்பரசன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகர் ஆக உள்ளார்.இரண்டாவது மகன் குறளரசன் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். T.ராஜேந்தர் அவர்களின் அடுக்கு மொழி வசனத்திற்கு இன்றளவுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.அதிலும் குறிப்பாக வாடா என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி என கூறிக்கொண்டு படத்தில் எதிரிகளை பந்தாடுவது எல்லாம் இவரால் மட்டும் முடிந்ததே.
இவர் நேற்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த செய்தி நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.இதனை தொடர்ந்து T.ராஜேந்தர் உடல் நிலை குறித்து ரசிகர்கள் கவலை அடைந்து,அவருக்கு என்ன ஆகியது என தெரியாமல் நின்று கொண்டிருந்தனர்.இந்நிலையில் தந்தை உடல்நலம் குறித்து தற்போது சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி.என தெரிவித்துள்ளார்.
Embed video credits: Little talks
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
Hope Mr T Rajendar will face rhe current challenge and come out joyously !
கவலைப் படாதீா்கள் நண்பா்களே, நம் T.R.அவா்கள் விரைவில் நலம் பெற்று சிலம்பரசன் அவா்கள் கூறிய படி நம்மை சந்திப்பாா். இன்னும் திரைத்துறையில் சாதிக்கவேண்டியது நிறைய உள்ளது. !!!!!!!