வீட்டை விட்டு வெளியேறினார் சுஜா.. வெளியான புது தகவல் | Biggboss Ultimate

பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் சுஜா வருணி. இவர் சீசன் 1-ன் போது Wild Card என்ட்ரியாக உள்ளே வந்தார். அப்போது இவருக்கும், சிநேகனுக்கும் பல பிரச்சினைகள் ஏற்ப்பட்டன. சினேகன் விளையாட்டின் போது தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டார் என்ற விமர்சனங்களை முன் வைத்தவர். ஆனால் இவரால் கடைசி வரை தொடர முடியவில்லை. குறைவான வாக்குகள் பெற்ற காரணத்தினால் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

வீட்டை விட்டு வெளியேறினார் சுஜா.. வெளியான புது தகவல் | Biggboss Ultimate 1

விளம்பரம்

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் அவர்களின் மகன் சிவாஜி தேவ்வை திருமணம் செய்து கொண்டார். சிவாஜி தேவ் சுஜாவை விட 5 வயது இளையவர். என்ற போதிலும் 12 வருடங்களுக்கு முன்பு நட்பில் ஆரம்பித்த இவர்களின் வாழ்க்கைப்பயணம் பின்பு காதலாக மாறி இறுதியில் இவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு அத்வைத் என்ற மகனும் உண்டு. Youtube Video Embed Code Credits: Indiaglitz

வீட்டை விட்டு வெளியேறினார் சுஜா.. வெளியான புது தகவல் | Biggboss Ultimate 2

விளம்பரம்

இந்த நிலையில் சுஜா வருணி பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாக கூடிய நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அவரது மகனை நினைத்து மிகவும் கலங்கி அவனுக்கு ஒரு செய்தி சொன்னார். ஐ லவ் யூ செல்லம்.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.. அம்மா இங்க ரொம்ப ஸ்டாராங்கா இருக்கேன்.. சீக்கிரம் வந்துடுவேன் என்று கூறுகிறார். செல்போனில் அம்மா சொன்னதை கேட்கும் குட்டிப்பையன் அழகாக சிரிக்கிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.. தற்போது வெளியாகியுள்ள செய்தியில் இந்த வாரம் சுஜா வருணி வெளியேறிவிட்டார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன….Watch the Below Video…

Suja Varunee Evicted from Bigg Boss Ultimate Tamil - Vanitha, Balaji Murugadoss, Julie, Niroop

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment