தமிழ் சினிமாவில் இயக்குனர்,நடிகர்,இசையமைப்பாளர்,கதை ஆசிரியர் என அனைத்தையும் செய்தவர் T.ராஜேந்தர்.இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகர்,இசையமைப்பாளர் என பல அவதாரங்களை தமிழ் சினிமாவில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்த இவருக்கு இப்படம் மக்களிடம் பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றியை தன்வசம் வைக்க தொடங்கினார். அந்த காலத்திலேயே பெண்களை தொடாமல் நடிப்பவர் என்ற நற்பெயரும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் அரசியலில் இறங்கி அதன் ஆழத்தினையும் பார்த்தவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்,ஒரு பெண் குழந்தை உள்ளது.இதில் மகன் சிலம்பரசன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகர் ஆக உள்ளார்.இரண்டாவது மகன் குறளரசன் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். T.ராஜேந்தர் அவர்களின் அடுக்கு மொழி வசனத்திற்கு இன்றளவுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.அதிலும் குறிப்பாக வாடா என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி என கூறிக்கொண்டு படத்தில் எதிரிகளை பந்தாடுவது எல்லாம் இவரால் மட்டும் முடிந்ததே.அத்தகைய காலகட்டத்திலேயே இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் தமிழ் சினிமாவில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அண்மையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த செய்தி வெளியாகியதும் திரை உலகம் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு என்ன ஆனது என்று பதறினர்.இந்த செய்தி நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு தனது தந்தை உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டார்,அதில் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்தோம்,அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருப்பதாகவும் அதனால் மேல்சிகிச்சைக்கு அமெரிக்கா கூட்டிச்செல்ல உள்ளோம் என அறிவித்திருந்தார்.இந்நிலையில் நடிகர் சிம்பு முன்னேற்பாடுகளை செய்ய அமெரிக்கா சென்றுவிட்டார்.தற்போது இன்று ராஜேந்தர் தனது குடும்பத்துடன் அமெரிக்க செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் பூரண நலம் பெற்று வரவேண்டும் என்பதே எங்களின் ஆசை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்
Embed video credits : cineulagam
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in