நடிகை சாய் பல்லவி ஒரு நடனக் கலைஞராக தன் வாழ்வைத் தொடங்கியவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின்னாளில் திரைப்படத்துறையில் கால் பதித்தார். பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் “மலர் டீச்சர்” என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ், மலையாள ரசிகர்களின் உங்களைக் கொள்ளைக் கொண்டார். பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவரும் கூட. தமிழில் தனுஷ் – சாய்பல்லவி நடித்து வெளியான ரவுடி பேபி பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. Check Tweet Below
In a live TV interview today, highlighted on Body-Shaming & its impact on women.
No woman should be discriminated on basis of their appearances/looks, color complexion & other physical characteristics.@PMOIndia @HMOIndia @MoHFW_INDIA @PTTVOnlineNews @pibchennai @ANI pic.twitter.com/rsPMLKKc7Z
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 27, 2022
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படம் வெளியானது. அதில் வரும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து சாய் பல்லவியை உருவக்கேலி செய்துள்ளார் ஒருவர். அதில் அவர் சாய்பல்லவியின் மூக்கு, உதடு என எதுவுமே சரியில்லை, ஒரு நடிகைக்கு உண்டான கவர்ச்சியே இல்லை என கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார். அவரின் இந்த பதிவு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இணையத்தில் பல விவாதங்கள் எழுந்துள்ளன. கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியவர் சாய் பல்லவி. தனது தோற்றம் பற்றியும், அடுத்தவர் மீதும் அக்கறை கொண்டவர் சாய் பல்லவி.
இப்படி அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு ஆதரவாக தெலங்கானா, மற்றும் புதுச்சேரி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். உருவக்கேலி செய்தவருக்கு தனது கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பேசிய தமிழிசை, தன் மீது பரட்டை, கறுப்பு, குள்ளம் என பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது எனவும், மனதளவில் தான் மிக காயப்பட்டதாகவும் கூறினார். தன்னுடைய உழைப்பாலும், திறமையாலும் அந்த காயங்களை ஆற்றியதாகவும் கூறினார். குள்ளமாக இருப்பது, கருப்பாக இருப்பது, சுருட்டை முடியுடன் இருப்பது தனது தவறு கிடையாது, எல்லாவற்றிலும் அழகு உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆண்கள் மீது இப்படியான உருவக்கேலிகள் செய்யப்படுவதில்லை. பெண்கள் முன்னேற்றத்தை தடுப்பதற்காக இப்படியான உருவக்கேலிகள் செய்யப்படுகின்றன. அப்படிதான் சாய் பல்லவி மீதும் எதிர்மறைத் தாக்குதல் தொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார். தமிழிசை அவர்களின் இந்த கருத்துக்கு பலரும் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in