தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் எத்தனை? மின் திட்டங்கள் எத்தனை ஒரு விரிவான அலசல்.

2020ம் ஆண்டில் மின் தேவை 16,000 மெகாவாட் எட்டும் என்று தினமலரில் 2016 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டது. கடந்த ஆண்டே மின் தேவை 16,000 மெகவாட் தாண்டி விட்டது இப்போது இருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் அந்த தேவையை முமழவதுமாக பூர்த்தி செய்கின்றதா ?? இல்லை.
2016 ஆண்டு, தமிழகத்தில் இருக்கும் மின்நிலையங்கள் 10874 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யும் திறன் உடையது என்று தினமலர் 2016 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டு உள்ளது. 2006–2011 திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய மின் நிலையங்கள் முலம் கூடுதல் மின்சாரம் கிடைக்கின்றது ஆனால் அந்த மின்சாரம் தற்போதுள்ள மின்சார தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.
மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய குறிப்பிட்ட சில ஆண்டுகளில் ஒரு புதிய மின் உற்பத்தி நிலையம் கூட உருவாக்கப்படவில்லை, அதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் 2006–07ஆண்டுகளில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததால் மின் பற்றாகுறை ஏற்பட்டு அதன் பலனை மக்கள் 2008-ல் அனுபவித்தனர்.

தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் எத்தனை? மின் திட்டங்கள் எத்தனை ஒரு விரிவான அலசல். 1

விளம்பரம்

பின்னால் வந்த அரசுகள் புதிய மின் உற்பத்தி தொடங்க மின் உற்பத்தி நிலையங்களுக்கு எவ்வித முயற்சியும் முன் எடுக்கப்படவில்லை குறைந்தபட்சம் அடிக்கல் கூட நாட்டப்படவில்லை. ஆனால் ஆண்டுதோறும் மக்கள் தொகையும் மக்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. அதே போல் வேலைவாய்ப்பிற்காக புதிய தொழில்சாலைகளின் தேவைகளும் அதிகரிக்கின்றன அதற்க்கு எல்லாம் மின் தேவைகளும் பெருமளவு அதிகரிக்கின்றன.
இதனை உணர்ந்து ஒரு நல்ல அரசு முன்கூட்டியே உணர்ந்து அதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
ஆனால் திமுக அரசு உருவாக்கிய மின் உற்பத்தி திட்டங்களால் வந்த பலனை அனைவரும் அனுபவித்தார்கள்.
தற்போது ஏற்படும் மின் பற்றாக்குறையை அதிக விலை கொடுத்து அதிமுக அரசு 2011 முதல் அதிக விலை கொடுத்து ‌வாங்கியது. அதனால் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து தற்போது 4.5 லட்சம் கோடிகளுக்கும் மேல் உள்ளது.சரி..!! 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் என்ன என்பதை பார்ப்போம்…!!

தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் எத்தனை? மின் திட்டங்கள் எத்தனை ஒரு விரிவான அலசல். 2
1. எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
3. வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 2007-ல் தொடங்கப்பட்டது.
4. இதே அனல் மின்நிலையத்தில் 2008 -ஆம் ஆண்டு மேலும் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது
5. வல்லூர் 1–ம் அலகு (500 மெகாவாட்) 13–8–2007 அன்றும்; வல்லூர் 2–ம் அலகு (500 மெகாவாட்) 13–8–2007 அன்றும்; வல்லூர் 3–ம் அலகு (500 மெகாவாட்) 13–8–2007 அன்றும் தொடங்கப்பட்டது.
6. உடன்குடியில் பி.எச்.ஈ.எல். மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு திட்டங்கள் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.
7. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து 183 மெகாவாட் இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம், 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த விவரங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளன.
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment