டாணாக்காரன் படத்தினை காவலர் பயிற்சி பள்ளிகளில் திரையிட்டுள்ளதற்கு இயக்குனர் தமிழ் நன்றி தெரிவித்துள்ளார் ஜெய் பீம் படத்தில் காவல் ஆய்வாளராக நடித்து அசத்தியிருப்பவர் தமிழ்.இவர் முன்னதாக அசுரன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் முதல் முறையாக இயக்கிய படம் டாணாக்காரன்.இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார்.பிரபல தயாரிப்பு நிறுவனமான பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியது.
இப்படத்திற்கு சினிமா நடிகர்களிடமும் மற்றும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பலரும் டாணாக்காரன் படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த படத்தில் லால் , எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் போஸ் வெங்கட் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலத்தினை சேர்த்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.
இந்த படம் தமிழகத்தில் உள்ள 43 காவல் பயிற்சி பள்ளிகளிலும் திரையிடப்பட்டு அங்குள்ள பயிற்சி காவலர்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்துள்ளனர்.இப்படத்தினை பார்த்த காவலர்கள் இயக்குனர் தமிழை பாராட்டி வருகின்றனர்.தற்போது பயிற்சி பள்ளிகளில் டாய்லெட் வசதி மற்றும் புகார் பெட்டிகள் என பல மாற்றங்கள் வந்துள்ளதையும் இயக்குனர் தமிழிடம் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய இயக்குனர் தமிழ் கூறியதாவது,தமிழகம் முழுவதும் பயிற்சி பள்ளிகளில் டாணாக்காரன் திரையிட ஆணையிட்ட பயிற்சி ஐ.ஜி அருள் ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்,மேலும் பேசிய அவர் ஒரு படம் உருவாக்க படும் கஷ்டம் அதன் வெற்றியில் காணாமல் சென்று விடும் என்று கூறுவார்கள் தற்போது அந்த மகிழ்ச்சியில் தான் உள்ளேன் எனவும்,படத்தினை பார்த்த காவலர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார் மேலும் ஒட்டுமொத்த ‘டாணாக்காரன்’ படக்குழுவினருக்கும் அதில் பணியாற்றியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in