2006 ஆம் ஆண்டு வெளியாகிய ஆஷிக் பனாயா என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் தனுஸ்ரீ தத்தா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்து தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.தொடர்ந்து பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.2010 ஆம் ஆண்டு தமிழில் விஷால் நடிப்பில் வெளியாகிய தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.அதன்பின்னர் சரியான படவாய்ப்புகள் இவருக்கு இல்லாததால் படத்தில் நடிப்பதில் இருந்து விலகினார்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் மீடூ விவகாரத்தில் இயக்குனர் நானா பட்நேகர் மீது புகார் கொடுத்துள்ளார்.இந்த விஷயம் பெரும் பரவலாக பேசப்பட்டது.தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் பெரும் அதிர்ச்சியினையும் பரபரப்பினையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.இந்த பதிவில் அவர் உயிருக்கு ஆபத்து வந்தால் அதற்கு காரணம் இயக்குனர் நானா பட்நேகர் என அறிவித்துள்ளார்.கபாலி படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் நானா பட்நேகர் ,இவர் மீது வந்த இந்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
இந்த பதிவில் அவர் கூறியதாவது,எனக்கு ஏதாவது நடந்தால் #metoo குற்றம் சாட்டப்பட்ட நானா படேகர், அவரது வழக்கறிஞர்கள் & கூட்டாளிகள் மற்றும் அவரது பாலிவுட் மாஃபியா நண்பர்கள் பொறுப்பு என்பதைத் தெரியப்படுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.மேலும் அவர்களின் திரைப்படங்களை பார்க்காதீர்கள் ,அவர்கள் என்னை அதிகமாக துன்புறுத்தினார்கள் சட்டமும் நீதியும் என்னைத் தவறவிட்டிருக்கலாம் ஆனால் இந்த மாபெரும் தேசத்தின் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.என தெரிவித்துள்ளார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in