தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கியவர் தாடி பாலாஜி,விவேக் மற்றும் வடிவேலு உடன் காமெடியில் சினிமாவை கலக்கியவர் தாடி பாலாஜி,இவருக்கு தற்போது பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் இவரது நகைச்சுவை திறமை தான்,பலர் தன்னை கேலி செய்தாலும் அதனை நகைச்சுவையாக மாற்றிவிடுவார்.சினிமாவில் இருந்து ஒருகட்டத்தில் இருந்து விலகி விஜய் தொலைக்காட்சியில் இணைந்தார்,அங்கு நிகழ்ச்சிகளை தொகுத்து நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து தனது திறமையை காண்பித்து தனக்கான ஒரு இடத்தினை ரசிகர்களிடம் பிடித்தார்.
பின்னர் அங்கிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்று அசத்தினார்.குடும்ப பிரச்சனை காரணமாக இவர் காதலித்து திருமணம் செய்த நித்தியா என்பவரை பிரிந்தார்.இவர்களுக்கு போஷிகா என்ற மகளும் உள்ளார்.நித்தியாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான்.இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சனைகள் வருவது இயல்பான ஒன்று அடிக்கடி இருவரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருவார்கள்,தற்போது சில ஆண்டுகளாக இருவரும் எந்தவித சண்டையுமின்றி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்
இந்நிலையில் தாடி பாலாஜி மனைவி நித்தியா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.மாதவரத்தில் தனது எதிர் வீட்டில் உள்ளவருடன் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் அவரது காரினை இரவில் அடித்து நொறுக்கியுள்ளார்,இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதித்ததில் நித்தியா அங்கு சென்று இருப்பது தெரிந்துள்ளது,இதனால் அவர் மீது பிறர் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில் உடனடியாக போலீசார் கைது செய்தனர்.இது தாடி பாலாஜி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in