நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.இப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கான வேலைகள் தொடங்கியுள்ளது.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மனைவி மற்றும் குழந்தைகளுக்காகவும் நேரத்தினை செலவு செய்து வருகிறார் தல அஜித்.தற்போது அஜித் மனைவி மற்றும் குழந்தைகளுடன் துபாய் சென்றுள்ளார்.அங்கு கப்பலில் மனைவியுடன் செம்ம ரொமேன்டிக் ஆக புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தினை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in