பாடலுடன் தொடங்கும் தளபதி 65 ஷூட்டிங்! வெளியான புதிய அப்டேட்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது. கொரோனா பாதிப்பால் வெறும் 50 சதவீத இருக்கையில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை செய்து அசத்தியது.

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் வானதியும் பூங்குழலியும் குறும்பு புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

ஓ.டி.டி யில் வெளியான பிறகும் திரையரங்கில் கூட்டம் குறையாமல் வசூலை குவித்தது மாஸ்டர் திரைப்படம். தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜுடன் இனைந்து கொடுத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுப்பதற்கு நெல்சன் திலீப்குமாருடன் இணைந்துள்ளார். நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 65.

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

பாடலுடன் தொடங்கும் தளபதி 65 ஷூட்டிங்! வெளியான புதிய அப்டேட் 1

விளம்பரம்

இந்த படத்தில் பூஜா ஹெட்கே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இந்த படம் ரஸ்சியாவில் எடுக்க இருப்பதாகவும் , படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் ஜானி டான்ஸ் மாஸ்டர் இணைந்துள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தியை கேட்ட தளபதி ரசிகர்கள் சந்தோஷத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment