தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் படத்தினை எடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விக்ரம் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று 400கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் அடுத்து யாரை இயக்க போகிறார் என ஆவலாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அடுத்து தளபதி விஜயை வைத்து மீண்டும் படத்தினை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திலேயே உள்ளனர்.அண்மையில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி 67 படம் குறித்து கேட்டபொழுது அதற்கான பதிலை அவர் அளித்துள்ளார்
லோகேஷ் இதுகுறித்து கூறியதாவது,தளபதி இப்போ வாரிசு படத்துல நடிச்சிட்டு இருக்காரு,இது முடிஞ்ச பிறகு தான் பார்க்கணும்,தயாரிப்பு நிறுவனம் தான் அதற்கான அறிவிப்பினை வெளியிடும்,அதான் முறை அதற்கு முன் சொல்ல கூடாது,வாரிசு வெளியாகும் பொழுது தளபதி 67 படம் குறித்து அப்டேட்டுகள் வந்தால் சரியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.இதனால் தளபதி 67 படத்தினை லோகேஷ் இயக்குவது தற்போது உறுதியாகியுள்ளது.விரைவில் அதிகாரபூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம்
Embed video credits : THANTHI TV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in