வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனம் ஜீ தமிழ்.தற்போது பல நாடகங்களை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகிறது.மேலும் பல நாடகங்கள் ஹிட் ஆகியும் உள்ளது.நாடகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் நடனம்,நகைச்சுவை ,விவாதம் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி அசத்தி வருகிறது.அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் தமிழா தமிழா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா போல இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சி இது ஆகும்.இந்த நிகழ்ச்சி தற்போது முதல் சீசனை முடித்து இரண்டாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த ப்ரோமோவில் ஜோதிடர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் மாரிமுத்து கலந்துகொண்டுள்ளார்,அப்பொழுது ஜோதிடர்கள் பேச்சை கேட்ட மாரிமுத்து கோவம் வருகிறது அதே நேரத்தில் சிரிப்பும் வருகிறது அடக்கிட்டு உக்காந்திருக்கேன் என கூறுகிறார்,ஸ்டாலின் முதல்வர் ஆகவே மாட்டாருன்னு இந்தியாவில் உள்ள எல்லா ஜோசியக்காரனும் சொன்னான் ஆனா முதல்வர் ஆகிட்டாரு மூஞ்ச கொண்டு எங்க வச்சிக்கிடுவே என பயங்கரமாக சண்டையிட்டுள்ளார்.
Embed Video Credits : ZEE TAMIL
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in